மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்... தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு


மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்... தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
x

image courtesy: @ICC 

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட உள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜப்டா, மரிசான் கேப், அயபோங்கா காக்கா, மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, நோன்குலுலெகோ ம்லாபா, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே, மியானே ஸ்மிட், க்ளோ ட்ரையன்.

1 More update

Next Story