மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்... இந்தியா 276 ரன்கள் சேர்ப்பு


மகளிர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்... இந்தியா 276 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: @ICC / @BCCI

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பிரதிகா ராவல் 78 ரன்கள் எடுத்தார்.

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களம் கண்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.

இதில் மந்தனா 36 ரன்னிலும், அடுத்து வந்த ஹார்லீன் தியோல் 29 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பிரதிகா ராவல் அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தன.

இதில் ரோட்ரிக்ஸ் 41 ரன், ரிச்சா ஹோஷ் 24 ரன், தீப்தி சர்மா 9 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆடி வருகிறது.

1 More update

Next Story