மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு


மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
x

image courtesy: twitter/@BCCIWomen

தினத்தந்தி 26 July 2024 8:08 AM GMT (Updated: 26 July 2024 8:12 AM GMT)

மகளிர் ஆசிய கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன.

தம்புல்லா,

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா - வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பந்து வீச உள்ளது.


Next Story