வெற்றி பெறப்போவது யார் ? பரபரப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்

நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் சுருண்டது.இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. இது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 374ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது தொடக்கம் முதல் பென் டக்கெட் , ஜாக் கிராலி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலி 14 ன்களுக்கு முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இறுதியில் நேற்று 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது .
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் டக்கெட் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஆலி போப் 27 ரன்னில் வெளியேறினார்.ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதம் கடந்தனர்.4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரி புரூக் 111 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 105 ரன்னில் வெளியேறினார்.மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






