இந்த வருடம் எந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும்..? ஐ.பி.எல்.சேர்மன் கருத்து


இந்த வருடம் எந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும்..? ஐ.பி.எல்.சேர்மன் கருத்து
x

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 47 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 23 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த ஒரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவும் இல்லை வெளியேறவும் இல்லை. இதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு தொடரில் எந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும்? என்பது குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் தனது கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நிச்சயமாக, இந்த ஆண்டு கோப்பையை வெல்லாத ஒரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை. பஞ்சாப் கிங்ஸ் ஒரு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மேலும் ஆர்சிபி, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அணிகளில் சில இறுதிப்போட்டியில் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிட்டால், எங்களுக்கு ஒரு புதிய வெற்றியாளர் கிடைப்பார். அவ்வாறு நடந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம்" என்று கூறினார்.

1 More update

Next Story