அதற்கு பிறகு விராட் கோலி கிரிக்கெட் உடன் தொடர்பிலேயே இருக்க மாட்டார் - ரவி சாஸ்திரி


அதற்கு பிறகு விராட் கோலி கிரிக்கெட் உடன் தொடர்பிலேயே இருக்க மாட்டார் - ரவி சாஸ்திரி
x

image courtesy:PTI

தினத்தந்தி 19 May 2025 8:40 PM IST (Updated: 19 May 2025 8:42 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெற்ற அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விராட் கோலியை காண முடியும். அதுவும் எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. அடுத்த (2027) ஒருநாள் உலகக்கோப்பை வரை இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் விராட் கோலி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்ட பிறகு அவர் கிரிக்கெட் உடன் தொடர்பிலேயே இருக்க மாட்டார் என்று இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி விளையாட உள்ளார். அவர் ஒருவேளை ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து விட்டால் அதன் பின்னர் நிச்சயமாக கிரிக்கெட் உடனான தொடர்பிலேயே இருக்க மாட்டார். அவர் பயிற்சியாளராகவோ அல்லது ஒளிபரப்பாளராகவோ பொறுப்பேற்க விரும்பாதவர். இந்திய அணி இங்கிலாந்தில் தனது முதல் டெஸ்டை விளையாடும்போது நான் அவரை தவற விடுவேன். அவர் ஒரு சாம்பியனாக இருந்தார். அதைத்தான் நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story