சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம் - கில்கிறிஸ்ட் அட்வைஸ்


சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம்  - கில்கிறிஸ்ட் அட்வைஸ்
x
தினத்தந்தி 10 Dec 2024 3:40 PM IST (Updated: 10 Dec 2024 7:25 PM IST)
t-max-icont-min-icon

2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 241 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவேண்டுமானால், பார்டர் - கவாஸ்கர் தொடரில் எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் இரண்டில் கட்டாயம் வென்றாக வேண்டும். அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியதால் மீண்டும் பார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் 2-வது போட்டியில் 7,11 ரன்கள் அடித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் விழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு விளையாடினாரோ அதைப் போன்று விராட் கோலி செய்தால் நிச்சயம் அவரால் மீண்டும் இந்த தொடரில் ரன் குவிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கில்கிறிஸ்ட் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதோ, எதிரணியின் திறமையிடமிருந்து வருவதோ கிடையாது. நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.

2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு வெளியே சென்ற பந்துகளை துரத்தி விளையாடாமல் 241 ரன்கள் குவித்தாரோ அதேபோன்று விராட் கோலியும் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை துரத்தாமல் தனக்கு நேராக வரும் பந்துகளை அடித்து விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்" என்று கூறினார்.


Next Story