இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி: கருண் நாயர்

கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இ உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்த கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வுசெய்யப்ட்டது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது,
இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த செய்திக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன். கடந்த 12-16 மாதங்களாக சிறப்பாக விளையாடி வருகிறேன். என்னால் முடிந்த ஆட்டத்தை நிலையாக கொடுக்க வேண்டும் என்ற மன நிலையுடன் செயல்பட்டது பலனை கொடுத்துள்ளது. என தெரிவித்துள்ளார்.






