இந்தியாவுக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸின் மாபெரும் சாதனையை தகர்த்த வாண்டர்சே


இந்தியாவுக்கு எதிராக விவியன் ரிச்சர்ட்ஸின் மாபெரும் சாதனையை தகர்த்த வாண்டர்சே
x
தினத்தந்தி 5 Aug 2024 12:52 AM GMT (Updated: 5 Aug 2024 6:20 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா பெர்னண்டோ தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே சுழலில் மொத்தமாக சிக்கியது. 42.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 202 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரோகித் 64 ரன்கள் அடிக்க இலங்கை தரப்பில் வாண்டர்சே 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வாண்டர்சே இந்தியாவுக்கு எதிராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் மாபெரும் சாதனையை தகர்த்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் விவியன் ரிச்சட்சை முந்தி 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1. முரளிதரன் - 7 விக்கெட்டுகள் (30 ரன்கள்)

2. அஜந்தா மெண்டிஸ் - 6 விக்கெட்டுகள் (13 ரன்கள்)

3. வாண்டர்சே - 6 விக்கெட்டுகள் (33 ரன்கள்)

4. விவியன் ரிச்சர்ட்ஸ் - 6 விக்கெட்டுகள் (41 ரன்கள்)

5.அகிலா தனஞ்சயா - 6 விக்கெட்டுகள் (54 ரன்கள்)


Next Story