முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை வீழ்த்திய நியூசிலாந்து

Image Courtesy: @ZimCricketv
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஹராரே,
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன .
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 75 ரன் எடுத்தார். தொடர்ந்து 191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 60 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முனியாங்கோ 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்தினார்.






