முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
![முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38636339-nzvssa.webp)
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
லாகூர்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொடர் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னெர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
முதல் போட்டியில் பீல்டிங் செய்யும்போது பந்து நெற்றியில் தாக்கியதில் காயமடைந்த ரச்சின் நவீந்திரா இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.