டி.என்.பி.எல்.: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.: கோவை அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 21 July 2024 9:25 AM GMT (Updated: 21 July 2024 9:29 AM GMT)

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது.

இதையடுத்து தொடரின் 3வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story