டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை


டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை
x

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கோவை அணி 149 ரன்கள் எடுத்தது .

கோவை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது. இதில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த கோவை கிங்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் கோவை அணியில் விஷால் வைத்யா 6 ரன்கள், லோகேஷ்வர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தநர் . பின்னர் பாலசுப்பிரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடி ரன்கள். குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கோவை அணி 149 ரன்கள் எடுத்தது .

இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடுகிறது

1 More update

Next Story