வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 17-ம் தேதியும், 2-வது போட்டி 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. இரண்டு போட்டிகளும் முல்தானில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷான் மசூத் தலைமையிலான அந்த அணியில் நீண்ட நாள் கழித்து தொடக்க ஆட்டக்காரர் ஆன இமாம் -உல் -ஹக் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

ஷான் மசூத் (கேப்டன்), சாத் ஷகீல், அப்ரார் அகமது, பாபர் அசாம், இமாம் - உல் - ஹக், கம்ரான் குலாம், காசிப் அலி, குர்ரம் ஷசாத், முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நோமன் அலி, ரோஹைல் நசீர், சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா


Next Story