இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
x

image courtesy: twitter/@ICC

ஜிம்பாப்வே அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹராரே,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட (4 நாள் ஆட்டம்) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாட்டிங்ஹாமில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் சீனியர் வீரர்களான சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி விவரம்: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், பென் கர்ரன், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதவரே, வெல்லிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நயவுச்சி, சிக்கந்தர் ராசா, தபட்ச்வா ட்ஸி, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.


1 More update

Next Story