டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வீரர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் (898 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (897 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (812 புள்ளி) 3வது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (781 புள்ளி) 6 இடங்கள் உயர்ந்து 5வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (724 புள்ளி) 9வது இடத்திலும், சுப்மன் கில் (672 புள்ளி) 17வது இடத்திலும், விராட் கோலி (661 புள்ளி) 20வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா (890 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (856 புள்ளி) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (851 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (415 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ் (284 புள்ளி) 2 இடங்கள் உயர்ந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (283 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.