டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்


டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்
x

Image Courtesy: @ICC

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

லாகூர்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 269 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 109 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 277 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 22 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்திருந்தது.

வெற்றிக்கு 226 ரன்கள் தேவை என்ற நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா இன்று தொடங்கியது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே டோனி ஜி ஜோர்ஜி 16 ரன்னில் அவுட் ஆனாட். தொடர்ந்து களம் புகுந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன், கைல் வெர்ரையன் 19 ரன், முத்துசாமி 6 ரன், சைமன் ஹார்மர் 14 ரன், பிரேவிஸ் 54 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் ரிக்கெல்டன் 45 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 60.5 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 93 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

1 More update

Next Story