டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய முன்னாள் கேப்டனின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த கம்மின்ஸ்


டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய முன்னாள் கேப்டனின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த கம்மின்ஸ்
x

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் (140 ரன்) சதத்தால் 337 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.

இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 36.5 ஓவர்களில் 175 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் 19 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அதை 3.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது 8-வது முறையாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற இந்திய முன்னாள் கேப்டனான பிஷன் சிங் பேடியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. இம்ரான் கான் - 12 விக்கெட்டுகள்

2. ரிச்சி பெனாட் - 9 விக்கெட்டுகள்

3. பிஷன் சிங் பேடி/ பேட் கம்மின்ஸ் - 8 விக்கெட்டுகள்

4. ஜேசன் ஹோல்டர் - 7 விக்கெட்டுகள்


Next Story