இலங்கைக்கு எதிரான டெஸ்ட்; டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

Image Courtesy: @OfficialSLC
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
காலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளும் நடக்கின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்த தொடர் 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையடுத்து இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






