நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

Image Courtesy: @ICC
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
புலவாயோ,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளது. 2 போட்டிகளும் புலவாயோவில் நடைபெற உள்ளன.
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் டாம் லாதம் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதன் காரணமாக முதல் போட்டிக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக சாண்ட்னர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதல் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.






