இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா பொறுப்பான ஆட்டம்


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா பொறுப்பான ஆட்டம்
x

பண்ட், கே.எல்.ராகுல் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. லோகேஷ் ராகுல் (47 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்) களத்தில் நின்றனர்.இந்த சூழலில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கில் (8 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். பண்ட், கே.எல்.ராகுல் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.கே.எல்.ராகுல் அரைசதமடித்தார்.

4வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 159 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது . கே.எல். ராகுல் 72 ரன்களும், பண்ட் 31 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story