ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே
x

Image Courtesy: @ZimCricketv

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புலவாயோ,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது.

மழை காரணமாக சுமார் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 44.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஷீத் கான் 25 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா மற்றும் நியூமன் நியாம்ஹுரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் அடித்திருந்தது. கும்பி 4 ரன்களுடனும், பென் கர்ரண் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்சில் 73.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 243 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 75 ரன், சிக்கந்தர் ராசா 61 ரன் எடுத்தனர். இதன் மூலம் ஜிம்பாப்வே 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 86 ரன் பின்னிலையுடன் ஆப்கானிஸ்தான் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

1 More update

Next Story