டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவருக்கு சென்ற நமீபியா - ஓமன் ஆட்டம்; உச்சகட்ட பரபரப்பு
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
பார்படாஸ்,
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள் நமீபியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஓமன் 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் அடித்தார். நமீபியா தரப்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவுக்கு ஓமன் கடும் சவால் அளித்தது. இதனால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. உச்சகட்ட பரபரப்புக்கு மத்தியில் அந்த ஓவரை வீசிய மெஹ்ரன் கான் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
நமீபியா தரப்பில் அதிகபட்சமாக ஜான் ப்ரைலின்க் 45 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் அதிகபட்சமாக மெஹ்ரன் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் 109 ரன்கள் அடித்திருந்த நிலையில் நமீபியாவும் 109 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்க பட உள்ளது.