டி20 உலகக் கோப்பை: நமீபியாவை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி


டி20 உலகக் கோப்பை: நமீபியாவை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
x

image courtesy: T20 World Cup twitter

தினத்தந்தி 12 Jun 2024 8:38 AM IST (Updated: 12 Jun 2024 10:58 AM IST)
t-max-icont-min-icon

நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

ஆண்டிகுவா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நமீபியா முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட நமீபியா, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.


Next Story