டி20 தொடர்: யு.ஏ.இ-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம்

Image Courtesy: @ICC
வங்காளதேச அணி யு.ஏ.இ-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரின் ஆட்டங்கள் பாசில்லாபாத் மற்றும் லாகூரில் நடக்கிறது. இந்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் யு.ஏ.இ-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மே 17-ம் தேதியும், இரண்டாவது போட்டி மே 19-ம் தேதியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வங்காளதேச அணி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.






