இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய நட்சத்திர வீரர் விலகல்



2-வது மற்றும் 3-வது போட்டியிலிருந்து ரிங்கு சிங் காயம் காரணமாக விலகினார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர வீரர் நிதிஷ் ரெட்டி விலகியுள்ளார். மேலும் இன்றைய போட்டி (2-வது போட்டி) மற்றும் 3-வது போட்டியிலிருந்து முதுகு வலி காரணமாக ரிங்கு சிங் விலகியுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire