இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்தியாவின் ஆடும் அணியை தேர்வு செய்து அறிவித்த முன்னாள் வீரர்


இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்தியாவின் ஆடும் அணியை தேர்வு செய்து அறிவித்த முன்னாள் வீரர்
x

image courtesy: ICC

இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் வருகிற 22-ந் தேதியும், 2-வது போட்டி சென்னையில் 25-ந் தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் 28-ந் தேதியும், 4-வது போட்டி புனேயில் 31-ந் தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி மும்பையில் பிப்ரவரி 2-ந் தேதியும் நடக்கிறது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்தனர். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியின் துணை கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடருக்காக தான் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் அணியை (பிளேயிங் 11) முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பிளேயிங் 11 பின்வருமாறு:-

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்.


Next Story