நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி
x

ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மவுண்ட் மவுங்கானு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய இளம் வீரர் டிம் ராபின்சன், சதமடித்து அசத்தினார். அவர் 66 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கேப்டன் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்மேன்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

1 More update

Next Story