சையத் முஷ்டாக் அலி கோப்பை; காலிறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.
பெங்களூரு,
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா அணிகள் நேரடியாக நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. மேலும், பெங்கால், சண்டிகர், ஆந்திரா, உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சண்டிகரை வீழ்த்தி பெங்காலும், ஆந்திராவை வீழ்த்தி உத்தரபிரதேசமும் காலிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன.
காலிறுதி ஆட்டங்களில் முறையே பரோடா - பெங்கால் (காலை 11.00 மணி), டெல்லி - உத்தரபிரதேசம் (மாலை 4.30 மணி), மத்திய பிரதேசம் - சவுராஷ்டிரா (காலை 9.00 மணி), மும்பை - விதர்பா (மதியம் 1.30 மணி) அணிகள் மோத உள்ளன.
காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற அனைத்து அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அரையிறுதி ஆட்டங்கள் வரும் 13ம் தேதியும், இறுதிப்போட்டி வரும் 15ம் தேதியும் நடைபெறுகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.