சையத் முஷ்டாக் அலி கோப்பை; அரையிறுதியில் மும்பை-பரோடா அணிகள் இன்று மோதல்
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடாவை எதிர்கொள்கிறது.
பெங்களூரு,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, குருணல் பாண்ட்யா தலைமையிலான பரோடாவை எதிர்கொள்கிறது.
இதே மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி- மத்தியபிரதேசம் அணிகள் சந்திக்கின்றன. போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Related Tags :
Next Story