சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை - மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை - மத்தியபிரதேசம் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அரையிறுதியில் பரோடாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரஜத் படிதார் தலைமையிலான மத்தியபிரதேசம், அரையிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.
வலுவான இரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story