சிட்னி டெஸ்ட் : பும்ராவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் பும்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தாமாகவே முன்வந்து இந்த டெஸ்டில் விளையாடாமல் ஒதுங்கினார்.
இதனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 185 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது .
இந்த நிலையில், இந்த போட்டியில் இன்றைய உணவு இடைவேளைக்கு பிறகு பும்ரா காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் . மருத்துவமனையில் பும்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
Related Tags :
Next Story