மும்பையில் சிக்சர் மழை... சதம் விளாசினார் அபிஷேக் சர்மா


மும்பையில் சிக்சர் மழை... சதம் விளாசினார் அபிஷேக் சர்மா
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 2 Feb 2025 2:03 PM (Updated: 2 Feb 2025 2:26 PM)
t-max-icont-min-icon

அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சாம்சன் களம் இறங்கினர்.

இதில் சாம்சன் 16 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கினார். மறுபுறம் சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 17 பந்தில் அரைசதம் கடந்து அசத்தினார். அதே சமயம் திலக் வர்மா 24 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.


Next Story