பிரித்வி ஷா, சுப்மன் கில் குறித்து 2018-ல் நான் கணித்தது சரிதான் - நியூசிலாந்து முன்னாள் வீரர்


பிரித்வி ஷா, சுப்மன் கில் குறித்து 2018-ல் நான் கணித்தது சரிதான் - நியூசிலாந்து முன்னாள் வீரர்
x

பிரித்வி ஷாவை விட கில் சிறந்த வீரராக வருவார் என்று 2018-ல் தாம் கணித்ததாக சைமன் டவுல் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.

மறுபுறம் 2018 அண்டர் 19 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதன் காரணமாக 2019-ல் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் தற்போது வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரித்வியை விட சுப்மன் கில் சிறந்த வீரராக வருவார் என்று 2018-ல் தாம் கணித்தது நிஜமாகியுள்ளதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார்.

சுப்மன் கில்லை முதன் முதலில் நான் நியூசிலாந்தில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பையில் பார்த்தேன். அப்போது பிரித்வி ஷா பற்றி நிறைய பேச்சுக்கள் இருந்தன. ஆனால் அப்போது பிரித்வி ஷாவை சுப்மன் கில் முந்தி செல்வார் என்று நான் தைரியமான கருத்தை சொன்னேன். ஏனெனில் பிரிதிவி ஷா பேட்டிங்கில் சில டெக்னிக்கல் தவறு இருந்ததை பார்த்தேன். ஆனால் அந்த வயதிலேயே சுப்மன் கில் டெக்னிக்கில் பெரிய தவறுகள் இல்லை.

அத்துடன் பேட்டி எடுத்தபோது, 'நான் பெரிய போட்டிகளில் சதங்கள் அடித்து பெரிய வீரராக வரவேண்டும்' என்று சுப்மன் கில் தன்னம்பிக்கையுடன் சொன்னார். அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டையும் தாண்டி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த விரும்புகிறார். அதே போல ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் போன்றவர்கள் வருங்காலங்களில் இந்திய அணிக்காக பெரிய அளவில் சிறப்பாக விளையாடுவார்கள்" என்று கூறினார்.


Next Story