சிறந்த கேப்டனாக சுப்மன் கில் உருவெடுப்பார் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கணிப்பு


சிறந்த கேப்டனாக சுப்மன் கில் உருவெடுப்பார் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கணிப்பு
x

ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லீட்சில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கேரி கிர்ஸ்டன் கூறுகையில்,

'சுப்மன் கில், கிரிக்கெட் பற்றி ஆழமாக புரிந்து கொண்ட ஒரு புத்திசாலித்தனமான வீரர். சிறந்த கேப்டனாக உருவெடுப்பதற்குரிய அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்த அவர் தயாராகி வருகிறார்' என்றார்.

1 More update

Next Story