ஷகிப் அல் ஹசன் அரைசதம்... நெதர்லாந்து அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 64 ரன்கள் குவித்தார்.
கிங்ஸ்டவுன்,
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 27-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷாண்டோ மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனைதொடர்ந்து கை கோர்த்த ஷகிப் அல் ஹசன் - தன்சீத் ஹசன் இணை நெதர்லாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. இவர்களில் தன்சீத் ஹசன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய ஷகிப் அரை சதம் அடித்து 64 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.