அரையிறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்


அரையிறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்
x
தினத்தந்தி 27 Jun 2024 7:36 PM GMT (Updated: 27 Jun 2024 7:37 PM GMT)

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கயானா,

டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சால்ட்(5), மொயீன் அலி(8), பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2) ஹாரி புரூக்(25) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போது வரை இங்கிலாந்து அணி 10.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.


Next Story