சுயநலமற்றவர், வித்தியாசமானவர், புதுமையானவர் - விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் குறித்து வில்லியம்சன்
தம்முடைய பிறந்தநாளில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் திறமைகளைப் பற்றி கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
வெலிங்டன்,
நவீன கிரிக்கெட் உலகில் விராட் கோலி, ஸ்டீவ் சுமித், ஜோ ரூட் ஆகியோருடன் நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சனும் சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அந்த நால்வரையும் பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று வல்லுனர்கள் பாராட்டுவது வழக்கமாகும். இதனிடையே கேன் வில்லியம்சன் நேற்று தம்முடைய 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில் தம்முடைய பிறந்தநாளில் பேப் 4 பட்டியலில் இருக்கும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் திறமைகளைப் பற்றி கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "3 வகையான கிரிக்கெட்டிலும் புதிய தரத்தை உருவாக்கும் விராட் கோலி அவற்றுக்கிடையே நகரும் திறனை கொண்டவர். கிரிக்கெட்டில் வெற்றி பெறும் திறமை, அவரது இயல்பான சுயநலமற்ற தன்மை, அணிக்கான வெற்றிகளில் அதை பயன்படுத்த விரும்புவதற்கு விடாமுயற்சியுடன் காத்திருப்பதை நான் உண்மையில் பாராட்டுகிறேன்.
ஸ்டீவ் சுமித் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். அதிக தாக்கத்துடன் அவருக்கு எதிராக எப்படி பந்து வீச வேண்டும் என்ற திட்டத்தை இதுவரை யாரும் கண்டறிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர் பேட்டிங்கில் ஒரு புதுமை கொண்டு வந்துள்ளார். அது ஒரே மாதிரியாக இருந்தாலும் விதிமுறைகளை உடைக்கிறது. அந்த வகையில் வீரர்கள் தங்களுடைய தனித்துவமான கலையை நிகழ்த்துவது பாராட்டுக்குரியது.
ஜோ ரூட் தனது ஆட்டத்திற்கு உட்படுத்திக் கொள்வதில் மற்ற இருவரை விட வித்தியாசமானவர். அந்த அனைவருமே தங்களுடைய திறனை வைத்து இன்னும் முன்னேறுவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்கள் எங்களைப் போன்ற மற்றவர்கள் பின்பற்றுவதற்கான வரம்பு முறையை அமைக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நான் எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடினேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருப்பது சிறப்பானது" என்று கூறினார்.