சச்சின் தெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்ற சாரா


சச்சின் தெண்டுல்கர் அறக்கட்டளை இயக்குநராக பொறுப்பேற்ற  சாரா
x

சச்சின் தெண்டுல்கர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் துணை நிறுவனராக அவரது மனைவி அஞ்சலி இருந்து வருகிறார்.

இந்நிலையில், சச்சினின் மகளான சாரவும் தற்போது 'சச்சின் தெண்டுல்கர்' அறக்கட்டளையில் இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதனை சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.


Next Story