சாம் கரன் அரைசதம்..பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை


சாம் கரன் அரைசதம்..பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை
x

பஞ்சாப் அணியில் சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்

சென்னை,

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் ஷேக் ரஷீத் 11 ரன்கள், ஆயுஷ் மத்ரே 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சாம் கரன், டேவால்ட் பிரேவிஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். பிரேவிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். சாம் கரன் அரைசதமடித்து அசத்தினார் . தொடர்ந்து அதிரடியாக ஆடிய சாம் கரன் 88 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பஞ்சாப் அணியில் சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்

இறுதியில் 19.2ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190ரன்களுக்கு ஆட்டமிழந்தது .தொடர்ந்து 191 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடுகிறது

1 More update

Next Story