‘கடைசியாக ஒரு முறை’ வைரலாகும் ரோகித் சர்மாவின் பதிவு


‘கடைசியாக ஒரு முறை’ வைரலாகும் ரோகித் சர்மாவின் பதிவு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அபார சதத்தின் (121 ரன்கள்) உதவியுடன் வெறும் 38.3 ஓவர்களில் வெற்றி பெற்றது.

முந்தைய ஆட்டத்தில் அரைசதமும் இந்த ஆட்டத்தில் சதமும் அடித்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தனதக்கினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பும் ரோகித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதில், “கடைசியாக ஒரு முறை, சிட்னியில் இருந்து விடைபெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story