ஜெய்ஸ்வாலிடம் ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது - மைக் ஹசி


ஜெய்ஸ்வாலிடம் ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது - மைக் ஹசி
x

image courtesy: AFP

கேப்டனாக நீங்கள் உங்கள் வீரருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என மைக் ஹசி கூறியுள்ளார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் லபுஸ்ஷேன் கொடுத்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் தவற விட்டார். அதற்கு முன்பாகவே உஸ்மான் கவாஜா கொடுத்த கேட்சையும் ஜெய்ஸ்வால் கோட்டை விட்டிருந்தார். அதன் காரணமாக கோபமடைந்த ரோகித் சர்மா அருகில் நின்ற ஜெய்ஸ்வாலை திட்டும் வகையில் பேசினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ஜெய்ஸ்வால் மற்றுமொரு கேட்சை தவற விட்டார்.

இந்நிலையில் இளம் வீரரான ஜெய்ஸ்வாலிடம் ரோகித் சர்மா அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உண்மையை சொன்னால் கேப்டனிடம் இருந்து இது சரியான பாடி லாங்குவேஜ் கிடையாது. கண்டிப்பாக விக்கெட் வேண்டும் என்பதால் ரோகித் இவ்வாறு உணர்ச்சியை காட்டுவதை நான் பாராட்டுகிறேன். ஆனால் கேப்டனாக நீங்கள் உங்கள் வீரருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இங்கே யாருமே கேட்சை தவற விடாமல் இருக்க முடியாது. அது இளம் வீரரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story