ஐ.பி.எல். வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா


ஐ.பி.எல். வரலாற்றில் 4-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா
x

குஜராத்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மும்பை அணியில் தடை காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா திரும்பினார். இதில் டாஸ் ஜெயித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையடுத்து 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அந்த 8 ரன்களையும் பவுண்டரிகள் மூலமே அடித்தார். இதனையும் சேர்த்து ஐ.பி.எல். வரலாற்றில் அவர் அடித்த பவுண்டர்களின் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த 4-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ஷிகர் தவான் - 768 பவுண்டரிகள்

2. விராட் கோலி - 711 பவுண்டரிகள்

3. டேவிட் வார்னர் - 663 பவுண்டரிகள்

4. ரோகித் சர்மா - 601 பவுண்டரிகள்


1 More update

Next Story