'ரிட்டயர்டு அவுட்'... முதல் வெளிநாட்டு வீரராக கான்வே படைத்த மோசமான சாதனை


ரிட்டயர்டு அவுட்... முதல் வெளிநாட்டு வீரராக கான்வே படைத்த மோசமான சாதனை
x

Image Courtesy: @IPL 

பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.

சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் டெவான் கான்வே 'ரிட்டயர்டு அவுட்' மூலம் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜடேஜா களம் இறங்கினார். இந்நிலையில், டெவான் கான்வே 'ரிட்டயர்டு அவுட்' ஆனதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார்.

அதாவது ஐ.பி.எல். வரலாற்றில் 'ரிட்டயர்டு அவுட்' மூலம் வெளியேறிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கான்வே படைத்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 5 பேர் (கான்வேயையும் சேர்த்து) 'ரிட்டயர்டு அவுட்' ஆகி உள்ளனர். அந்தப்பட்டியல்,

1. ரவிச்சந்திரன் அஸ்வின்

2. அதர்வா தைடே

3.சாய் சுதர்சன்

4. திலக் வர்மா

5. டெவான் கான்வே

1 More update

Next Story