ரஞ்சி டிராபி; அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடக்கம்

கோப்புப்படம்
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் குஜராத்-கேரளா, மும்பை-விதர்பா அணிகள் மோத உள்ளன.
அகமதாபாத்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நாளை ஆரம்பமாக உள்ளன. அரையிறுதியில் குஜராத் - கேரளா மற்றும் மும்பை - விதர்பா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
அரையிறுதி சுற்று முழு விவரம்:-
1. அரையிறுதி 1 - குஜராத் - கேரளா (அகமதாபாத்)
2. அரையிறுதி 2 - விதர்பா - மும்பை (நாக்பூர்)
Related Tags :
Next Story