ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்க இயலவில்லை.
இதனால் தாமதமாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . மேலும், சஞ்சு சாம்சனை தவிர்த்து அணியில் விளையாடிய மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.






