பஞ்சாப் - மும்பை ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்? - வெளியான தகவல்


பஞ்சாப் - மும்பை ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்? - வெளியான தகவல்
x

ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது

அகமதாபாத்,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று 1ல் வெற்றிபெற்ற பெங்களூரு இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. தகுதிச்சுற்று 2ல் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 3ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், தகுதிச்சுற்று 2 இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட குறைவான வாய்ப்புகளே உள்ளன.

அதேவேளை, இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் லீக் சுற்று புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story