பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
பார்ல்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது .
Related Tags :
Next Story