முதல் பந்திலேயே அவுட்... ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான சாதனை படைத்த ஜெய்ஸ்வால்


முதல் பந்திலேயே அவுட்... ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
x

image courtesy: AFP

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் 0 (1) ஆனார். இதன் மூலம் அவர் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது, இந்த போட்டியில் முதல் பந்தை சந்தித்த அவர், ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் வீழ்ந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தின் முதல் பந்தில் ஆட்டம் இழந்த பேட்ஸ்மேன்கள் பட்டியல் ;

ஆர்ச்சி மெக்லாரன் (இங்கிலாந்து) - 1894

ஸ்டான் வொர்திங்டன் (இங்கிலாந்து) - 1936

ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) - 2021

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) - 2024


Next Story