வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; அயர்லாந்து முன்னணி வீரர்கள் விலகல்
x

Image Courtesy: @ICC

வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக அயர்லாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த முக்கிய ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் மற்றும் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஆகியோர் காயமடைந்ததை தொடர்ந்து இருவரும் இந்த ஒருநாள் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்டிஸ் கேம்பருக்கு வலைபயிற்சியின் போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், கிரேக் யங் உள்ளூர் போட்டிகளின் போது தொடை பகுதியில் காயத்தை சந்தித்தன் காரணமாகவும் தொடரில் இருந்து விலகியதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து அயர்லாந்து ஒருநாள் அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஜோர்டன் நீல் மற்றும் பேட்டர் ஸ்டீபன் தொஹனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story